இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் சித்தரிப்பு …….முனைவர் கி. அய்யப்பன்                         முன்னுரை   உலகில் முதன் முதலாக கி.பி 1890-ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசனும், வில்லியம் பிரிசு கிரினும் சினிமாக் காமிரா உருவாகக் காரணமாக அமைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து கி.பி 1885-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த லூமியர் சகோதரர்கள் திரைப்படக்கருவியைக் கண்டறிந்தார்கள். அவர்கள் தயாரித்த 'தொடர்வண்டி நிலையத்திற்குத் தொடர்வண்டி வருகை' என்ற படம்தான் உலகின் முதல் படம். இதனைத் தொடர்ந்து 1903-ஆம் ஆண்டில் வெளியான 'ஒரு பெரிய தொடர்வண்டி கொள்ளை' என்பதுதான் சற்று நீளமான திரைப்படம். 1919-ஆம் ஆண்டில் இராபர்ட் பிள ஹர்த்தி என்ற ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர் செய்திக் குறும்படங்களைத் தயாரித்தார். இன்று ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சைபால் சட்டர்ஜி(டி.வி வேல்டு இதழின் ஆசிரியர்) ‘ஒவ்வொரு வாரமும் 30 மொழிகளில் 110 மில்லியன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன’ எனக் கூறுக...

இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு

படம்
  இடக்கை நாவலில் திருநங்கை சித்திரிப்பு -----முனைவர் கி. அய்யப்பன் சமகாலத்தில் இருக்கும் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன்.   அவரது சமீபத்திய நாவலான இடக்கை இதுவரை தமிழ் இலக்கிய உலகம் கடக்காத, பேசாத ஒரு பெருவெளியை பேசுகிறது. சாதாரண எளிய விளிம்பு நிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகளின் வரலாறு இப்பெரு நிலத்தில் இதுவரை சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. மன்னர்களின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு மக்களின் வாழ்க்கை வரலாறு ஏடுகளில் இடம் பெற்றதில்லை. அப்படி விளிம்பு நிலை மக்கள் மீது அதிகாரத்தின் கரங்கள் செலுத்துகிற அடக்குமுறைகளைப் பற்றியும், மன்னராட்சி காலத்தின் விசித்திர ஒழுங்குகள் குறித்தும் தனது இடக்கை நாவலில் எஸ். ராமகிருஷ்ணன் தனக்கே உரிய குறியீட்டு உத்திகளுடன் பதிவு செய்கிறார். இடக்கை கதைச் சுருக்கம் இடக்கை நாவல் சமூகத்தின் இடது கையாக, இடப்புறமாக ஒடுக்கப்படுகின்ற விளிம்பு நிலை மக்கள், திருநங்கைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரைப்பற்றி விரிவாக பேசுகிறது. மனித உடலில் ஒரே அளவிலான, வண்ணத்திலான, வடிவத்திலான இரு கைகள் இருக்கின்றன. ஆனால் வலது கைக்கு தருகிற முக்கியத்து...