சிலப்பதிகாரத்தில் திருநங்கையர் முனைவர் கி. அய்யப்பன் முன்னுரை சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். இக்காப்பியம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இளங்கோவடிகள் எழுதிய இக்காப்பியத்தில், சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் திருநங்கையர் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம் திருநங்கையரை ஆண்மை திரிந்த, பேடி என்ற சொற்களால் அடையாளப்படுத்துகிறது. மேலும், இக்காப்பியம் மதுராபதி தெய்வம் இருபால் தன்மை கொண்டதாகவும் பதிவு செய்கிறது. இவ்வாறு சிலப்பதிகாரத்தில் திருநங்கையர் குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. பேடி பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர...
இடுகைகள்
ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
திருமந்திரத்தில் திருநர் பிறப்பியல் சிந்தனைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருமந்திரத்தில் திருநர் பிறப்பியல் சிந்தனைகள் ------முனைவர் கி. அய்யப்ப ன் முன்னுரை தமிழ்ச் சமூகத்தில் இன்றும் விளிம்புநிலையில் திருநர் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் இவர்கள் அலி, பேடி, பேடு முதலிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர். சைவ இலக்கிய நூலான திருமந்திரத்திலும் திருநரின் பிறப்பு பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருநர் பற்றிய அடிப்படை விளக்கங்களுடன், திருமந்திரத்தில் திருநர் பிறப்பு பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது. பேடி+பேடன்=பேடு பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப...