மரப்பல்லி நாவலில் பெண் ஓரினப்பால் சித்திரிப்பு முனைவர் கி . அய்யப்பன் இ யற்கையை மீறியும் இயற்கையான நிகழ்வுகள் நடந்தேறுவதுண்டு . வேற்று பால் இனத்தின் மீதான ஈர்ப்பு பொதுவானது . ஆனால் ஒரே பால் இனத்தின் மீது ஈர்ப்பு கொண்டு அதனை தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதும் இயற்கையை மீறிய ஒரு இயற்கை நிகழ்வுதான் . ஓரினச்சேர்க்கையை பலரும் ஆதரிக்கக் காரணமும் அதுதான் . அவரவரது விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமைகளுக்குள் இது அடங்குகிறது . ஓரினச்சேர்க்கை குறித்து தமிழில் முதல் முதலாக கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்தான் பேசியது . கணேசன் என்னும் பாத்திரம் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கையாளனாய் இருந்தது என்று மேலோட்டமாய் மட்டுமே பேசியது . இதையும் தாண்டி அழுத்தமாய் பெண் ஓரினச்சேர்க்கை குறித்து பேசியிருக்கிறது மரப்பல்லி நாவல் . நூலாசிரியர் குறிப்பு வா . மு . கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா . மு . கோமகன் , ஈரோடு மாவட்டம் , விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்...
இடுகைகள்
செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது