தமிழ்த் திரைப்படங்களில் திருநங்கையர் சித்தரிப்பு …….முனைவர் கி. அய்யப்பன் முன்னுரை உலகில் முதன் முதலாக கி.பி 1890-ஆம் ஆண்டில் தாமஸ் ஆல்வா எடிசனும், வில்லியம் பிரிசு கிரினும் சினிமாக் காமிரா உருவாகக் காரணமாக அமைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து கி.பி 1885-ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த லூமியர் சகோதரர்கள் திரைப்படக்கருவியைக் கண்டறிந்தார்கள். அவர்கள் தயாரித்த 'தொடர்வண்டி நிலையத்திற்குத் தொடர்வண்டி வருகை' என்ற படம்தான் உலகின் முதல் படம். இதனைத் தொடர்ந்து 1903-ஆம் ஆண்டில் வெளியான 'ஒரு பெரிய தொடர்வண்டி கொள்ளை' என்பதுதான் சற்று நீளமான திரைப்படம். 1919-ஆம் ஆண்டில் இராபர்ட் பிள ஹர்த்தி என்ற ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவர் செய்திக் குறும்படங்களைத் தயாரித்தார். இன்று ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சைபால் சட்டர்ஜி(டி.வி வேல்டு இதழின் ஆசிரியர்) ‘ஒவ்வொரு வாரமும் 30 மொழிகளில் 110 மில்லியன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன’ எனக் கூறுக...